முள்ளியவளை அஞ்சல் அலுவலகம் இடம்மாற்றம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு முள்ளியவளை அஞ்சல் அலுவலகம் இடம்மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை அஞ்சல் அலுவலகம் இதுவரை தண்ணீரூற்று பகுதியில் இயங்கி வந்துள்ள நிலையில் தற்பொழுது முள்ளியவளை துயிலுமில்லத்திற்கு முன்னால் இடம் மாற்றப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே இயங்கி வந்த அஞ்சல் அலுவலக வளாகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் குறித்த அறிவித்தலை எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தமிழ் மொழியில் துயிலுமில்லத்திற்கு முன்பாக என்றும் சிங்கள மொழியில் இராணுவ முகாமிற்கு முன்பாக என்றும் ஒரே இடம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers