விலங்கின உரிமைக் காப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Ajith Ajith in சமூகம்

விலங்கின உரிமைக்காப்பாளர்கள் இன்று அலரிமாளிகையின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பில் நாய் ஒன்று எரிக்கப்பட்டமையை அடுத்து விலங்குகளுக்கு பாதுகாப்புக்கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. விலங்கின வளர்ப்பாளர்களும் இதில் பங்கேற்றனர்.

இதன்போது அவர்கள், விலங்கின நலன்புரி சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை விலங்கின நலன் சட்டம் ஒன்றை கொண்டுவர தாம் முனைப்பாக செயற்படப்போவதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க உறுதியளித்துள்ளார்.

அத்துடன் நாய் ஒன்றுக்கு எரியூட்டியவரை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers