பொலிஸ் காவலரணை தாக்கியவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை

Report Print Mubarak in சமூகம்

மூதூர் பகுதியில் பொலிஸ் காவலரண் சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எட்டுப் பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

கந்த டிசம்பர் 10 ஆம் திகதி மூதூர் பெரியபாலம் பகுதியில் வைத்து மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்த எம்.மஹ்சூம் (29) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை மீது மோதி விபத்துக்குள்ளானதில் நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதோடு பொலிஸ் காவலரணும் சேதமாக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் புலானாய்வுத் துறையினர் மேற்கொண்ட விசாரணையின் பேரில் குறித்த கலகத்திற்கு முன்னின்று செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேற்படி சந்தேக நபர்கள் எட்டுப்பேரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கைது செய்தனர்.

மூதூர், ஸாபி நகர், பெரிய பாலம்,ஜாயா நகர், பகுதியைச் சேர்ந்த 30, 33, 39, 32, 48, மற்றும் 49 வயதுடைய எட்டுப் பேரே செய்யப்பட்டனர்.

இந்த நிலையிலே சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உட்பட ஐவர் பிணையில் வெள்ளிக்கிழமை (4) விடுவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers