வவுனியாவில் திடீரென பற்றி எரிந்த மரத்தினால் பரபரப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - சிவபுரம் பகுதியில் மரம் தீப்பிடித்து எரிந்தமையால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

சிவபுரம் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள ஆலமரத்திற்கு அக்காணியில் வசிப்போர் வழைமைபோல விளக்கு ஏற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை ஏற்றபட்ட விளக்கின் மூலம் மரத்தில் தீ பற்றியுள்ளது. இதனால் மரத்தின் ஒருபகுதி பற்றி எரிந்து முறிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு பூவரசங்குளம் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சற்று பதற்ற நிலையும் ஏற்பட்டிருந்தது.