கால்நடைகளை இறைச்சிக்காக அறுப்பதனை தற்காலிகமாக இடை நிறுத்த தீர்மானம்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ச்சியாக இறந்து வருவதாகவும், இறைச்சிக்காகவும் கால்நடைகள் அறுக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பான விடயங்களை பொது மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்குடன் கிண்ணியா சூறா சபையின் ஏற்பாட்டில் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரி, உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடவில் பின்வரும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கால்நடைகளின் இரத்தம், மற்றும் மாதிரிகளை பரிசோதனை பகுப்பாய்வுக்கு அனுப்பி விரைவாக அறிக்கையினை பெற்றுக் கொள்ளும் வரை கால்நடைகளை இறைச்சிக்காக அறுப்பதனை தற்காலிகமாக இடை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தினை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நடவடிக்கைக்காக அனுப்புவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest Offers