வீடு நோக்கி சென்ற இருவருக்கு நேர்ந்த கதி

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரான்குளத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் மோட்டர்சைக்கிளில் வீடு நோக்கி பயணித்து கொண்டிருந்த போது மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியும், மோட்டர்சைக்கிளும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியதுடன் குறித்த இருவரும் பயணித்த மோட்டார்சைக்கிள் பல துண்டுகளாக உடைந்து சிதறியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரும், காயமடைந்தவரும் கிரான்குளத்தினை சேர்ந்தவர்கள் என்பதுடன், இருவரும் உறவினர்கள் என தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers