இன்று காலை காலமானார் மலையகத்தின் தமிழ் அரசியல்வாதி

Report Print Thirumal Thirumal in சமூகம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உப தலைவரும், மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி இன்று காலமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள் அனுபவம் கொண்ட அவர் தனது 59 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

இவர் இன்று அதிகாலை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இயற்கை எய்தியதாக அவரின் புதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை அன்னாரின் பூதவுடல் (மல்லிகைபூ சந்தி) இலக்கம் 315, டிம்புள்ள வீதி, ஹட்டன் இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதி கிரியைகள் நடைபெறும்.

Latest Offers