மகிந்தவின் ஆதரவாளர்கள் வெளியிட்ட கடும் எதிர்ப்பு! அமைச்சருக்கு ஏற்பட்ட சங்கடம்

Report Print Murali Murali in சமூகம்

போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து பெலியத்த வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் இன்று முதன் முதலாக சென்ற ரயிலில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

எனினும், இதன் போது மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அமைச்சருக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பெலியத்த ரயில் நிலையத்துக்கு சென்ற அமைச்சரிடம் இது மகிந்த ராஜபக்‌ஷவால் அமைக்கப்பட்ட ரயில் பாதை எனத் தெரிவித்து மகிந்தவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்கிருந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, குறித்த கண்காணிப்பு ரயிலில் மகிந்தவின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள், பதாதைகளையும் தொங்க விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers