சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம்

Report Print Mubarak in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கவும், முதலீடு செய்யும் வகையிலும் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் இன்று மூதூர், சம்பூர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு முதலீடு செய்து சுற்றுலா துறையை ஊக்குவிப்பது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண உள்ளூராட்சிஆணையாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers