புத்தளத்தில் 4 ஏக்கர் கஞ்சா பண்ணையை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர்

Report Print Manju in சமூகம்

புத்தளம் கொஸ்லந்த - அலுத்வெல பிரதேசத்தில் மிகவும் பாதுகாப்பாகவும், இரகசியமாகவும் நடத்திச் சென்ற 4 ஏக்கர் கஞ்சா பண்ணையை புத்தளம் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

50 லட்சம் பெறுமதியான கஞ்சா அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த மாதம் 25 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 3 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பண்ணையை புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை சுற்றி வளைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers