பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் மீண்டும்! அரசாங்கத்தின் நடவடிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதி வரும் வரையில் காத்திருப்பதாக தெரியவருகிறது.

அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கான ஆயத்த ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த விமான நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக தரமுயர்த்தவும், அங்கிருந்து தமிழகத்துக்கு வானூர்தி சேவைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனை கடந்த ஆண்டின் இறுதிக்குள் செய்வதற்கான திட்டம் இருந்த போதும் ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் இந்த திட்டம் பிற்போடப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் முன்பு சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரத்தை செயற்படுத்துவற்கு அனுமதியை கோரி மீளவும் அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.

Latest Offers