மகிந்த அணிக்கு கிடைக்கும் அரசின் புலனாய்வு தகவல்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், அரசாங்கத்திற்குள் நடக்கும் அனைத்து பேச்சுவார்த்தைகள் தொடர்பான புலனாய்வு விபரங்களும், மகிந்த ராஜபக்ச அணிக்கு கிடைத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றாக இணைந்திருப்பதால், முன்னர் இருந்த பிரச்சினைகள் தற்போது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இந்த தகவல் விசாரணைகளுக்கு பெரும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவது புலப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers