காத்தான்குடியில் வாகனம் செலுத்திய 730 பேர் கைது

Report Print Mubarak in சமூகம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த மூன்று மாதங்களில் அதிக வேகத்துடன் வாகனங்களைச் செலுத்திய குற்றச்சாட்டில் வாகன சாரதிகள் 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி இன்று தெரிவித்தார்.

இவர்களுக்கு நீதிமன்றம் 22 இலட்சம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளதாகவும் இதே குற்றச்சாட்டில் 2018ஆம் ஆண்டில் 1,304 பேர் கைதுசெய்யப்பட்டனர் எனவும் 31 இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக குற்றச் செயல்கள் மற்றும் கைது செய்யப்படும் பிரதேசமாகவும் காத்தான்குடி பிரதேசம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers