நாமல் குமாரவை கைது செய்ய நடவடிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

இராணுவத்தில் இருந்து தப்பியோடியமை சம்பந்தமாக நாமல் குமாரவுக்கு எதிராக இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்து, அவரை கைது செய்யும் என இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

நாமல் குமார சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அது முடிவடைந்த பின்னர், இராணுவம் விசாரணைகளை ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவத்தில் இருந்து தப்பியோடி நபர் சம்பந்தமாக இராணுவம் எடுக்கும் நடவடிக்கைகள் நாமல் குமார சம்பந்தமாகவும் எடுக்கப்படும் எனவும் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

நாமல் குமார போலியான கல்விச் சான்றிதழை சமர்ப்பித்து இராணுவத்தில் இணைந்து, பின்னர் அதில் இருந்து தப்பியோடியவர் என்பது குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்தது.

Latest Offers