குப்பை கூழங்களை உண்ணவரும் காட்டு யானைகளின் செயற்பாடுகளினால் பயணிகள் அச்சம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொட்டப்படும் குப்பை கூழங்களை உண்ணவரும் காட்டு யானைகளின் செயற்பாடுகளினால் போக்குவரத்துகளை மேற்கொள்வதில் மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

கந்தளாய் பிரதேசத்தில் சேகரிக்கப்படுகின்ற குப்பை கூழங்களை சூரியபுர பகுதியில் கொட்டுகின்றனர். இவ்விடம் கந்தளாய் மூதூர், தோப்பூர், சேருவில செல்லும் பிரதான வீதியாகும்.

இந்தக் குப்பைகளை சாப்பிடுவதற்காக செல்லும் காட்டு யானைகள் இரவு பகலாக அந்த குப்பை கூழங்களை சாப்பிட்டு வீதியின் நடுவிலும், ஓரத்திலும் நின்று கொண்டு இருப்பதால் அவ்வீதியால் மோட்டார் சைக்கிலிலும், முச்சக்கர வண்டியிலிலும் மற்றும் அப்பிரதேச மக்கள் துவிச்சக்கர வண்டியிலிலும் பயணம் செய்வோர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

அது மாத்திரமின்றி காட்டு யானைகளும் இரவும் பகலும் பொலித்தீன் உறைகளை சாப்பிட்டு காலப்போக்கில் இறந்து போகும் நிலையும் ஏற்படுகின்றது.

கடந்த மாதம் அப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் இறந்து போனதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers