9 வயதான சிறுமியை கொலை செய்து புதைத்த தாய்: இரண்டாம் கணவனுடன் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஒன்பது வயதான பெண் பிள்ளை கொலை செய்து இரகசியமாக புதைத்ததாக கூறப்படும் பெண்ணொருவரையும் அவரது இரண்டாவது கணவரையும் தாம் இன்று கைது செய்துள்ளதாக ஹாலி - எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாலி- எல பொலிஸ் பிரிவில் கந்தேகெதர மஹாதென்ன பிரதேசத்தில் வசித்து வரும் 26 வயதான பெண்ணும் 31 வயதான ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தை இந்த பெண்ணின் முதல் கணவர் அவரை விட்டுப் பிரிந்துள்ளார். இந்த பெண்ணும் அவரது 9 வயதான மகளும் இரண்டாவது கணவருடன் கந்தேககெதர மஹாதென்ன பகுதியில் குடியேறி வசித்து வந்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 வயதான மகளை கொலை செய்து, தோட்டத்தில் புதைத்துள்ளதாக பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஹாலி- எல பொலிஸார் பெண்ணையும் ஆணையும் கைது செய்துள்ளனர்.

புதைக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் சடலம் நாளைய தினம் தோண்டி எடுக்கப்பட உள்ளது. பதுளை சட்ட வைத்திய அதிகாரி வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் ஹாலி-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers