பிரபாகரனின் புகைப்படத்தோடு தவறான தலைப்பிட்ட யாழ். பத்திரிக்கை! கோபமடைந்து இளைஞர்கள் செய்த காரியம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன் நடந்து வரும் படத்தை பிரசுரித்து “ இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் “ என தலைப்பிடப்பட்ட நிலையில் பத்திரிகை வெளியாகி உள்ளது.

குறித்த செய்தி தலைப்புடன் தொடர்புடைய செய்தியானது இந்தியாவை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான சங்கர் என்பவரது கதையாகும். தொடர் கொலைகளை செய்த கொலையாளியின் மரண வாக்கு மூலம் என செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த செய்திக்கு இடப்பட்ட தலைப்பு , மற்றும் படம் என்பன வேண்டும் என்றே போடப்பட்டது என தெரிவித்தே பருத்தித்துறை பகுதிகளில் பத்திரிக்கையின் பிரதியை தீயிட்டு கொழுத்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.

தமிழ் மக்கள் மத்தியில் தேசிய தலைவர் என்றால் வே.பிரபாகரனே ஞாபகத்திற்கு வரும் நிலையில் வேண்டும் என்றே தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் நோக்குடன் இச் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.

Latest Offers