காலமான தமிழ் அரசியல்வாதியின் இறுதி கிரியைகள் நாளை

Report Print Thirumal Thirumal in சமூகம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி இன்று அதிகாலை காலமானார்.

அன்னாரின் பூதவுல் (மல்லிகைபூ சந்தி) இலக்கம் 315, டிம்புள்ள வீதீ, ஹட்டன் இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை மதியம் 2 மணியளவில் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஹட்டன் டன்பார் மைதானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள் அனுபவம் கொண்ட அவர் தனது 59 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers