வாகன விபத்தில் மூவர் படுகாயம்! ஒருவரின் நிலை கவலைக்கிடம்

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.

காத்தான்குடியில் இருந்து வேகமாக வந்த வான் ஒன்று மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இவர்களுள் ஒருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்து.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers