ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களுக்கு கிடைத்த பெறுமதியான பொருள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - நாயாறு ஆழ்கடலில் மிதந்து வந்த ஒரு தொகுதி வலை நேற்று மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளன.

நாயறுப்பகுதி மீனவர்கள் நேற்று காலை ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஆழ்கடல் பகுதியில் பெறுமதியான வலைகள் மிதந்து வருவதனை பார்த்து அவற்றை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட வலைகள் முல்லைத்தீவு பொலிஸாரிடம், மீனவர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 30ஆம் திகதி ஆந்திர மாநில கடற்தொழில் பதிவை கொண்ட மீனவ படகொன்று வளைஞர்மடம் பகுதியில் கரை ஒதுங்கியது.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட வலைகளும், நேற்றைய தினம் மீனவர்களால் மீட்கப்பட்ட வலைகளும் ஒரே வகையானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.