சர்வதேச யுத்த அனாதைகள் தினம் மூதூரில் அனுஷ்டிப்பு

Report Print Nesan Nesan in சமூகம்

இந்து குருமார்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யுத்த அனாதைகள் தினம் மூதூர், கிளிவெட்டி, பாரதிபுரத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனுஷ்டிப்பு ஶ்ரீவசிறி பாஸ்கரன் குருக்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிள்ளைகளுக்கு இலங்கை தமிழர் ஒன்றியத்தின் நிதியுதவியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருமலை மாவட்ட தலைவி எஸ்.சரோஜா, செயலாளர் எஸ்.சர்மிளா மற்றும் பொருளாளர் கே.பாலசரோஜீனி உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இயல்பு நிலையற்றுள்ள குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers