இறுதிப் போரில் உயிரிழந்தவரின் எண்ணிக்கையை திரட்டுமாறு சர்வதேச நிறுவனங்கள் கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் போர் முடிவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிப் போரில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை அறிந்து கொள்ள இறந்தவர்களின் பெயர்களை சேகரித்து தருமாறு இரு சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு நிரற்படுத்தல் குழு ஆகியவையே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள குழுக்களிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போரில் இறந்தோரின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தலின் மூலம் நினைவு சின்ன செயல்முறையை ஏற்படுத்துவதற்கு அளவிடல் முக்கியமானது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்று 10 வருடங்களாகியும் இன்னும் எத்தனைப்பேர் அதில் இறந்தார்கள் என்ற இறுதி தகவல் வெளியாகவில்லை.

இந்தநிலையில் உலகத்தில் எல்லா பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் எதிர்வரும் மாதங்களில் தமது குடும்பத்தினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரிடமும் பேசி, இறந்தோரின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளுமாறு மனித உரிமைகள் தரவு நிரற்படுத்தல் குழுவின் பிரதிநிதி பற்றிக் போல் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்த எண்ணிக்கையை சேகரிக்கும் பணிகள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் ஆரம்பித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த தகவல் சேகரிப்பின்போது போரில் இறந்த சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் திரட்டப்படுவதாக பற்றிக் போல் கூறியுள்ளார்.

Latest Offers