மறைந்த தமிழ் அரசியல்வாதியின் இல்லத்திற்கு ஜனாதிபதியின் செய்தியுடன் சென்ற எம்.பி

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உப தலைவரும், மத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமியின் இல்லத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க சென்றுள்ளார்.

அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுதாப செய்தியுடன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சந்தனம் அருள்சாமி உயிரிழந்திருந்தார்.

தனது 59ஆவது வயதில் காலமான சந்தனம் அருள்சாமியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக (மல்லிகைபூ சந்தி) இலக்கம் 315, டிம்புள்ள வீதீ, ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று மதியம் 2 மணியளவில் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள நிலையில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் அன்னாரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Latest Offers