ஹேரொயின் போதைப்பொருளை வைத்திருந்தவருக்கு இரண்டு மாதம் சிறைத் தண்டனை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை பகுதியில் 35 மில்லி கிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு இரண்டு மாதம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை - சுமேதகம பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் போதைப் பொருளுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவருக்கு இரண்டு மாத கால சிறைதண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Latest Offers