பருத்தித்துறையில் பொதி செய்யப்பட்ட நிலையில் கேரளா கஞ்சா மீட்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் இருந்து 118 கிலோகிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் இன்று அதிகாலை சக்கோட்டை கடற்பரப்பில் படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் கடற்படையினரால் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வல்வெட்டித்துறை பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers