எதிர்கால சந்ததிக்காக பழ மரங்களை வளர்போம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

எதிர்கால சந்ததிக்காக பழ மரங்களை வளர்போம் எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பொகவந்தலாவையில் இன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி செயலாளரும் நோர்வுட் பிரதேசசபை உறுப்பினருமான கல்யாணகுமார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப கைத்தொழில் அமைச்சினூடாக மரக்கன்றுகள் பெறப்பட்டதுடன் நுவரெலியா மாவட்டத்திற்கு 2000 சீத்தா பழ கன்றுகளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வழங்கி வைத்துள்ளார்.

மரநடுகை நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ வைத்தியசாலை, ஒலிரோசரி பாடசாலை, பொலிஸ் நிலையம் மற்றும் விகாரையிலும் இடம்பெற்றுள்ளது.

Latest Offers