மறு அறிவித்தல் வரும் வரை மாட்டிறைச்சி கடைகளை மூடுமாறு உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியாவில் மாட்டிறைச்சி கடைகளை மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடுமாறு, சகல கடை உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.சனூஸ் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.சனூஸ் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட வட்டமடு, சுண்டியாறு, சூரங்கல், ஆயிலியடி, குரங்குபாஞ்சான், தீனேறி போன்ற பகுதிகளில் அதிகளவான மாடுகள் உயிரிழந்துள்ளதோடு, தொடர்ந்தும் உயிரிழந்து வருகின்றன.

மேய்ச்சல் இல்லாமல் மாடுகள் உயிரிழப்பதாகவும், மாடுகளுக்கு ஒரு வகையான நோய் பரவி உயிரிழப்பதாகவும் கருத்துக்கள் பரவி வருகின்றது.

இவ்வாறு மாடுகளின் திடீர் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக, உயிரிழந்த மாடுகளின் இரத்த மாதிரிகள், பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கட்டுள்ளன.

அதன் தகவல்கள் வரும் வரையில், சகல மாட்டிறைச்சிக் கடைகள் தற்காலிகமாக மூடப்படும்.

இதனையும் மீறிக் கடையைத் திறக்கும் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் ஒரு வாரத்தினுள் மாத்திரம் சுமார் 300ற்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மாட்டு உரிமையாளர்கள் பல இலட்சம் ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers