மன்னாரில் 225ஆவது நாளாகவும் தொடரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு

Report Print Ashik in சமூகம்

மன்னார் நகரின் மத்திய பகுதியில் சதொச கட்டடம் அமைப்பதற்காக நிலம் தோண்டப்பட்ட போது சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தின் உட்பகுதி முழுவதும் அகழ்வு செய்யப்பட்டு வந்தது.

அகழ்வு பணியின் போது தொடர்ந்தும் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று 225ஆவது நாளாக வளாகத்தின் வெளிப்பகுதிகள் அனைத்தும் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக வளாகத்தில் எலும்புக்கூடுகளை அடையாளப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகள் குறைக்கப்பட்டு விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் இடம் பெற்றன.

விரிவுப்படுத்தும் பகுதிகளிலும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது வரை 282 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 277 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers