யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, மூதூரில் கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மூதூர் சஹாயபுரம் அறநெறி பாடசாலையில் இன்று இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் சங்கத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் சங்கத்தின் தலைவி சரோஜா தேவி, சங்கத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers