முதலை இறைச்சியுடன் இருவர் கைது

Report Print Manju in சமூகம்

முதலை இறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று பொலன்னறுவ சோமாவதிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை சோமவதி தேசிய பூங்கா ஊடறுத்து செல்லும் மகாவலி ஆற்றில் வாழும் எட்டு அடி நீளமான முதலையினை கொன்று இறைச்சியாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் ஹிங்குரங்கொடா, புத்த யயா பகுதியில் வசிப்பவர்கள் எனவும் இன்று நீதிமன்றத்திற்கு முன் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers