இத்தாலியில் இலங்கைப் பெண் தற்கொலை! தொடரும் சந்தேகம்..

Report Print Manju in சமூகம்

இத்தாலியில் உள்ள நாபோலி நகரத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணின் மரணம் குறித்து அவரது பெற்றோரும், உறவினர்களும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக நாபோலி பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மாரவில மகவெவ-கொஸ்வடியே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான உமயங்கி சுதாரி வீரசிறி என்றபெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவரது பெற்றோர்களான சுகத் வீரசிறி மற்றும் எமல்கா தில்கானி கருத்துத் தெரிவிக்கையில்,

எங்கள் மகளுக்கு இறக்க எந்த காரணமும் இல்லை. எங்கள் மகள் தினமும் எங்களிடம் பேசுவார். கடந்த 29ம் திகதி சிறிய மகளுடன் பேசினார்.

மருமகன் கடந்த 31ம் திகதி தான் தங்கியிருந்த அறையிலிருந்து வெளியேறியுள்ளார். மகள் எங்களுடன் பேசவில்லை என்பதால் உறவினரின் தொலைபேசிக்குபேசிப் பார்த்தோம்.

மகள் இறந்துவிட்டதாக அவர்கள் சொன்னார்கள். நாபோலி பொலிஸ் விசாரணைகள் நடத்துகின்றது. மருமகன் காணாமல் போனமை பற்றி நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றார்.

தாய் எமல்கா கூறுகையில்,

நாங்கள் அவரை ஜா-எலாவில் தேடினோம். கண்டுபிடிக்க முடியவில்லை. தொலைபேசியும் வேலை செய்யவில்லை.

மகள் இறந்தமை அல்லது வேறு ஏதோ நடந்ததால் அவர் மறைந்து வாழ்கிறார்.

உயிரிழந்த பெண்ணின் சகோதரி கருத்து தெரிவிக்கையில், அம்மாவின் உறவினர்கள் பலர் இத்தாலியில் உள்ளனர்.

அவர்கள் கூறினார்கள் மச்சானின் ஆவணங்கள் எல்லாம் எடுத்துவிட்டார்கள். அறைக்கு சீல்வைத்துள்ளார்கள். விசாணை செய்வதாக.

உமயங்கி முன்னர் திருமண்செய்து பிரிந்து வாழ்கின்ற நிலையில் ஜா-எல பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான நபரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

முதல் திருமணத்தில் உமயங்கிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது திருமணமான கணவருக்கு முதல் திருமணத்தின் ஒரு பையன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் உமயங்கி இத்தாலிக்குச் சென்றார். இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு, அவர் கடந்த செப்டம்பரில் இத்தாலிக்கு சென்றார்.

மருமகன் முதலாவது திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு பராமரிப்புபணம் செலுத்துவதற்காக பணம் கேட்கிறார் என்று மகள் என்னிடம் கூறினார்.

நாங்கள் 10 லட்சம் ரூபாய் தேடிக்கொடுத்தோம். நாங்கள் மருமகனை நம்பினோம். எங்கள் மகள் தூக்கில்தொங்கி இறந்துவிட்டதாக இத்தாலியில் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் எமக்கு சந்தேகம் இருக்கிறது. இலங்கையில் மறைந்திருந்த மருமகனைப் பற்றி நாங்கள் பொலிஸுக்கு புகார் செய்கிறோம்.

இத்தாலிய பொலிஸாரின் விசாரணைக்குப் பின்னர் சடலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.

Latest Offers