திருகோணமலையில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் விபத்துகளில் படுகாயமடைந்த நிலையில் 19 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இன்று காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 12 மணி வரைக்கும் இவ்விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை - உப்புவெளி, மிகிந்தபுர பகுதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் குழந்தை ஒன்றும் மற்றும் பெண்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

திருகோணமலை, ஆனந்தபுரி பகுதியில் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதேவேளை மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கரவண்டி மோதி தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மொரவெவவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மாட்டுடன் மோதி படுகாயமடைந்துள்ளனர்.

குச்சவெளியில் முச்சக்கரவண்டி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேபோல் மூதூரில் மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கர வண்டி மோதியதில் 5 பேர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்துக்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers