அவுஸ்திரேலியா சென்று வந்த இலங்கைத் தம்பதியினரின் நகைகளைத் திருடிய நபரிற்கு நேர்ந்த கதி

Report Print Manju in சமூகம்

அவுஸ்திரேலியாவுக்கு சென்று வந்திருந்த இலங்கைத் தம்பதியினரின் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் கைப்பையை கொள்ளையடித்த போதைப் பொருளுக்கு அடிமையான நபரொருவரை மிரிஹானா விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

இந்த தம்பதியினர் கடந்த 2018 டிசம்பர் 28ம் திகதி குறித்த தங்க நகைகளுடன் காரில் பொரல்லைக்கு சென்றுள்ளனர்.

அங்கு பொரல்லை மகசின் வீதியில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வாகனத்தை நிறுத்தி தேவையான கடமைகளுக்கு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

காரில் இருந்த பின்பக்க கதவு மூடுவதற்கு இந்த ஜோடி மறந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பின்பக்க கதவைத் திறந்து கைப்பையைத் திருடியுள்ளார்.

அவ்வாறு திருடிச்சென்ற கைப்பையை தங்க நகைளை எடுத்துக்கொண்டு வெல்லம்பிட்டி நடைபாதையில் வீசிவிட்டுச்சென்றுள்ளார்.

தங்க நகைகளின் ஒரு பகுதியை பல அடகு நலையங்களில் அடகு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு பகுது தங்க நகைகள் இரத்மலானையில் உள்ள அவரது வீட்டின் படுக்கை அறையின் கீழ் மறைக்கப்பட்டிருந்த்தாக தெரிவிக்கப்படுகிறது.

தங்கநகைகள் 2,60,000, ருபாய்க்கு விற்று அவற்றில் ரி.வி,கைத்தொலைபேசி மற்றும் வெள்ளிபொருட்கள் வாங்கியதாக விசாணைகளில் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான சந்தேகநபர் அத்தனகல்ல மற்றும் பொரல்ல பகுதிகளில் பல தங்க நகை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருட்டு காரணமாக, அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் செல்வது நிறுத்தப்பட்டது. கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest Offers