காலமான தமிழ் அரசியல்வாதியின் உடல் இறுதி கிரியையின் பின் அக்கினியில் சங்கமம்!

Report Print Thirumal Thirumal in சமூகம்

முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் காலஞ்சென்ற சந்தனம் அருள்சாமியின் பூதவுடல் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று மாலை 5 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி சுகயீனமுற்று டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் தனது 59 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

பூதவுடல் ஹட்டனில் உள்ள அன்னாரின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதன் பின் அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அந்தவகையில் இ.தொ.காவின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஆலோசகர் முத்து சிவலிங்கம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தமது அஞ்சலியை செலுத்தினார்கள்.

மேலும், பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு வந்து தங்களது அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடதக்கது.

Latest Offers