இளைஞனின் உயிரைப் பறித்த கட்டுத்துவக்கு

Report Print Mubarak in சமூகம்

அனுராதபுரம் மாவட்டத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக கெகிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயிருந்த தனது கால் நடைகளை இன்னுமொரு நபருடன் தேடிச் சென்ற போதே கெகிராவ முறுங்காஹிடி கந்த காட்டுப்பகுதியில் இன்று இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 28 வயதுடைய கெகிராவ எலகமுவ முறுங்காஹிடிபகுதியைச் வசிப்பிடமாக கொண்ட எம்.தனுஷ்க ஜவர்த்தன என்ற இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு அனுராதபுரத்திலிருந்து வருகை தந்திருந்த சோகோ பொலிஸாரும் கெகிராவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் இணைந்து நடாத்திய தேடுதலின் போது கட்டுத்துவக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக வேண்டி கெகிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers