மாடுகளை திருடி மறைத்து வைத்திருந்த இருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை கோமரங்கடவெல பகுதியில் இரண்டு மாடுகளை திருடி மறைத்து வைத்திருந்த இருவரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டார்.

கோமரங்கடவெல, வில்பொல குளம் மற்றும் கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த 48 மற்றும் 46 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கோமரங்கடவெல பகுதியில் இரண்டு மாடுகளைத் திருடி மறைத்து வைத்திருந்த நிலையிலே மாட்டு உரிமையாளர் கோமரங்கடவெல பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Latest Offers