கிழக்கு ஆளுநருக்கும் பா.உ. மஹ்ரூப்பிற்கும் இடையிலான சந்திப்பு

Report Print Mubarak in சமூகம்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக இன்று (7) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்புக்கும் இடையிலான சந்திப்பு ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதிய ஆளுனருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து செல்லப்படவுள்ள வேலைத்திட்டங்கள், கிண்ணியா பிரதேசத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெளிவுப்படுத்தினார்.

சுகாதாரம், கல்வி,தொண்டராசிரியர் விவகாரங்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும் ஆளுனர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

இதன் போது கிண்ணியா நகர சபையின்தவிசாளர் எ.ஏ.நளீம், நகர சபை உறுப்பினர்களான முகம்மட் றிஸ்வி, போன்றோரும் கலந்து கொண்டார்கள்.

Latest Offers