நமோ நாராயணாய நிலையத்தின் உரிமையாளர் திடீர் கைது!

Report Print Murali Murali in சமூகம்

நமோ நாராயணாய நிலையத்தின் உரிமையாளர் கீர்த்தி திஸாநாயக்க மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி வலம்புரி சங்குகளை விற்பனை செய்து பண மோசடி செய்ததாக காவல்துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers