வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதி மூலம் குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பேரவையின் செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் நா.புவனசுந்தரம், பேரவை உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்து இருந்த தட்டுமுனை கிராமத்திலுள்ள 388 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

Latest Offers