நீரியல் வள திணைக்களம் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் கடந்த 2018.08.02 ம் திகதி நீரியல் வள திணைக்களத்திற்கு எதிரே கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அடையாளம் தெரியாதோரால் நீரியல் வள திணைக்கள அலுவலகம் சேதமாக்கப்பட்டது.

குறித்த தாக்குதலுக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேரும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் முன்னிலையாகிய நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளாதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Latest Offers