ராமேஸ்வரம் வரும் தமிழக ஆளுநர்! இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கையர் கைது

Report Print Murali Murali in சமூகம்

சட்டவிரோமான முறையில் இந்தியாவிற்கு நுழைந்த இலங்கையர் ஒருவரை கடலூர் அகதிகள் முகாம் அருகில் வைத்து சுங்க துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 3ஆம் திகதி ராமேஸ்வரம் அருகே இயந்திர படகு ஒன்று கரையொதுங்கியிருந்தது. இது குறித்து தமிழக பொலிஸாருக்கு மீனவர்கள் தகவல் வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த படகு மன்னார் பகுதியை சேர்ந்தது என கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கடலூர் கீழ்பட்டு பகுதியில் சந்தேகநபர்கள் இருவர் சுற்றித்திரிவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நபர் மன்னார் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் இரகசிய இடம் ஒன்றில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

அத்துடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தமிழக ஆளுநர் ராமேஸ்வரம் வர இருக்கின்ற நிலையில், குறித்த இளைஞரின் கைது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest Offers