இலங்கையில் காலையில் ஏற்பட்ட பெரும் துயர்! உயிருக்கு போராடும் மக்கள்! வெளியான அதிர்ச்சி காணொளி

Report Print Vethu Vethu in சமூகம்

கண்டியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணியளவில் கண்டி , யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கட்டடத்தின் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்தவர்களின் உதவியுடன் மேல் இருந்து பாய்ந்து தப்பியுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் பரபரப்பான மயிர்கூச்செறியும் சம்பவமும் பதிவாகி உள்ளது. மேலும் சிலர் அங்கு சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட நால்வர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.