வீதியில் திரிந்த மனநலம் குன்றிய நபர்! மாநகரசபை உறுப்பினரின் மனிதாபிமான செயல்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை பகுதியில் மனநலம் குன்றிய நிலையில் அலைந்து திரிந்த நபரொருவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அப்பகுதி மக்களின் உதவியுடன் அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபர் பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த கோபி என்பவர் என தெரியவருகிறது. குறித்த நபருக்கு முடி வெட்டி, நீராட்டி, உணவு கொடுத்து பின்னர் வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

இந்த மனிதாபிமான பணியை செய்த உறுப்பினருப்பினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.