லசந்த மாத்திரமல்ல! வடக்கு, கிழக்கில் பல ஊடகவியலாளர்கள்... 10ஆவது ஆண்டு நினைவு

Report Print Ajith Ajith in சமூகம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் நீதியை வேண்டி நிற்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று ரத்மலானையில் உள்ள தமது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்க, அத்திட்டிய பகுதியில் வைத்து கொல்லப்பட்டார்.

எனினும் இதுவரை அவரின் கொலை தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் இன்று பொரல்ல மயானத்தில் லசந்தவின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்துரைத்த லசந்தவின் மகள், லசந்த மாத்திரம் அல்ல. வடக்கு, கிழக்கில் பல ஊடகவியலாளர்களும் போர் காலத்தில் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பிலும் நீதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers