கிளிநொச்சியில் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த வீதி புனரமைப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - நாகேந்திரபுரத்தில் உள்ள கள்ளியடி வீதி வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்திருந்த நிலையில் தற்போது கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கரைச்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத்திற்கு உட்பட்ட நாகேந்திரபுரம் கடற்தொழிலாளர்கள் தொழிலுக்காக பயன்படுத்தும் கள்ளியடி வீதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் தொழிலை சிரமமின்றி மேற்கொள்ளும் பொருட்டு கடற்தொழிலாளர்கள் இணைந்து குறித்த வீதியினை தற்காலிகமாக புனரமைத்துள்ளனர்.

கிராம மக்கள் கடற்தொழிலாளர்கள் இணைந்து இந்த புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.