எட்டு உயிர்களை பலியெடுத்த பாதுகாப்பற்ற புகையிரத கடவை பாதுகாப்பானதாக மாற்றம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா, விளக்குவைத்த குளத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த புகையிரத கடவை பாதுகாப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த புகையிரத கடவை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் கோகிலகுமார் அஞ்சலா தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் புளியங்குளம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.பொன்சேகா மற்றும் ஓமந்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

விளக்குவைத்த குளத்தில் பாதுகாப்பு புகையிரதக்கடவையை திறந்து வைத்தபின் கருத்து தெரிவித்த மருதமடு வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தெற்கு பிரதேசசபை உறுப்பினர் கோகிலகுமார் அஞ்சலா,

எமது கிராமத்தில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடந்த ஆண்டு எட்டு உயிர்களை பலி கொடுத்துள்ளோம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் புகையிரத பாதுகாப்பு கடவைகளை நிர்மாணிக்க வேண்டும் என கோரிய போதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers