ஆளுநரின் பதவியேற்புக்காக ஆதரவாளர்கள் பயணித்த வேன் மோதுண்டதில் மாடுகள் பலி

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையின், தியாவட்டவான் பிரதேசத்தில் வானில் மோதி 5 மாடுகள் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி பாலத்தை அண்மித்துள்ள தியாவட்டவான் பகுதியில் நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண புதிய ஆளுநரின் பதவியேற்பு நிகழ்விற்காக சென்று கொண்டிருந்த ஆதரவாளர்கள் பயணித்த வான் திருகோணமலையில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த போது தெருவில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வானின் முன் பக்கம் சேதமாகியுள்ளதுடன், விபத்தில் சிக்கிய 14 வயதான பாடசாலை மாணவரொருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.