வவுனியாவில் வைத்தியர்களின் கார் கண்ணாடிகள் விசமிகளால் உடைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் வைத்தியர் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களினுடைய கண்ணாடி இன்று அதிகாலை உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணி புரியும் வைத்தியர்களுக்கான கண்டி வீதியில் அமைந்துள்ள விடுதியில் வசித்து வரும் வைத்தியர்களின் மூன்று கார்களே இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்று காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் பாதுகாப்பு கமராக்களை ஆய்வு செய்ததுடன் இச்சம்பவம் பழிவாங்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டதா? அல்லது காரிலுள்ள பொருட்களை திருடுவதற்காக செய்யப்பட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அதிகாலையிலே ஒருவர் வந்து கார்களினுடைய கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்றது அருகிலுள்ள சீ.சீ.ரீ.வி கேமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.