திருகோணமலை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92 ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், துவிச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த எச்.வி.தனஞ்ஞய வயது (22), மற்றும் ஆரே.வை.ஹேரத் சத்துருவன் வயது (25) ஆகிய இருவருமே பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான வீதியை கடக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவருக்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.