வெலிக்கடை துப்பாக்கி சூடு: முன்னாள் சிறை அதிகாரிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Manju in சமூகம்

வெலிக்கடை சிறையில் துப்பாக்கி சூட்டில் 27 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலை அதிகாரி எமில் ரஞ்சன் லாமாஹேவா இன்று மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இம்மாதம் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை, சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.